திங்கள், 22 ஜூன், 2009

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

73:20. ...தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூரி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்;நிகரற்ற அன்புடையோன்.


''இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர்'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!''என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!'' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!'' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார்என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். நூல்:புகாரி 2291.


''அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுத்தல் ''

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஏகஇறைவன் தன் திருமறையில் மனிதகுலத்திற்கு தேவையான அனைத்து விதமான ஏவல் - விலக்கல் சட்டங்களை கூறி இருக்கின்றான்.

திருக்குர்ஆனில் கூறப்பட்ட மனிதகுலத்திற்கு தேவையான அனைத்து விதமான ஏவல் - விலக்கல் சட்டங்களையும் அதிகப்பட்சம் இறைத்தூதர் வாழும் காலத்திலேயே அவர்களும், அவர்களுடைய உறவினர்களையும்,உயிருக்கு உயிரானத் தோழர்களைக் கொண்டும் நடமுறைப்படுத்திக் காட்டினார்கள்.

திருக்குர்ஆனிலும், இறைத்தூதருடைய வாழ்க்கையிலும் உலகம் முடியும் காலம்வரை மனிதகுலம் பின்பற்றியொழகுவதற்கு போதுமான அம்சங்கள் அடங்கி இருந்த போதிலும் திருக்குர்ஆனுக்கு முந்தைய காலத்தில் ஏகத்துவத்தின் அடிப்படையில் இறைவனை பயந்து வாழ்ந்த நன்மக்களின் நற்செயல்களில் தனக்கு விருப்பமான சில சம்வங்களையும் இக்கால மக்கள் இறையச்சத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக தனது இறுதித்தூதர் அவர்களுக்கு எடுத்துக்கூறினான்.

அதில் ஒன்று தான் மேற்காணும் இறைவனை சாட்சியாகவும்,பொறுப்பாளருமாக்கி கடன் கேட்டவருக்கு மறுக்காமல் கடன் கொடுத்தவருடைய நற்செயலும், அல்லாஹ்வின் பெயரைக்கூறி கடன் பெற்றவர் குறிப்பிட்ட தவனையில் அதைத் திருப்பிக் கொடுத்த நற்செயலுமாகும்.

சாட்சிகளையும், பொறுப்பாளரையும் கொண்டு வந்தால் மட்டுமே கடன் தருவேன் என்று உறுதியாகக் கூறியவரிடம் அவைகளைக் கொண்டு வரமுடியாதவர் அவைகளுக்காக இறைவனை சாட்சியாக்கியதும் பதில் கூறி தப்பித்துக் கொள்வதற்காக காரணங்களைத் தேடாமல் தாமதமின்றி நீ சொல்வது தான் சரி என்றுக்கூறி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அல்லாஹ்வுக்காக அவர் கோரியக் கடனை அழகிய முறையில் கொடுத்து விடுகிறார்.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட அவருடைய நற்செயல் நம் அனைவருக்கும் வரவேண்டும் அதற்காகவே அந்த சம்பவத்தை இறைவன் தனது தூதருக்கு சொல்லிக் காட்டினான்.

படிப்பினைகள்

நில புலன்கள், ஆபரணங்கள் போன்ற மதிப்புள்ள சொத்துக்களை உடையவர்கள் அவர்களுக்கு திடீரென பண நெருக்கடி ஏற்பட்டால் மேல்படி நில புலன்கள்,ஆபரணங்கள் போன்றவற்றை பிணையாக்கி எளிதில் கடன் பெற்று அதன் மூலம் தனது நெருக்கடித் தீர்ந்ததும் தாமதமின்றி அவைகளை மீட்டிக்கொள்வார்கள்.

நில புலன்கள், ஆபரணங்கள் போன்ற மதிப்புள்ள சொத்துக்கள் இல்லாதவர்கள் எதைப் பிணையாக்குவார்கள் ? வசதி இல்லாதவர்களுக்கு யார் சாட்சியாகுவார்கள் ?

அவர்கள் அல்லாஹ்வைத் தவிற வேறெவற்றையும் பிணையாக்க முடியாது ! வேறெவரையும் சாட்சியாக்க முடியாது !

வேறெந்த வழியுமில்லாத ஒருவர் அல்லாஹ்வை சாட்சியாக்கி கடன் கோரினால் தாமதமின்றி அல்லாஹ்வுக்காக அழகிய முறையில் தவணை விதித்து கடன் கொடுக்க இறைநம்பிக்கையாளர்கள் முன் வர வேண்டும்.

இவரிடம் கொடுத்தால் திரும்பப் பெற முடியாது, திரும்பப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு ஈடாகப் பெறுவதற்கு அவரிடம் எதுவும் கிடையாது என்று கடன் பெறுபவருடைய பேக்ரவுண்டைப் பார்க்கக் கூடாது.

அவ்வாறுப் பார்த்தால் அல்லாஹ்வின் அழகிய கடன் வழங்கும் திட்டம் இறைநம்பிக்கையாளர்களால் நிறைவேற்ற முடியாமல் போகும். இறைநம்பிக்கையாளர்கள் இறைவனின் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப் படாவிட்டால் இறைமறுப்பாளர்கள் நிறைவேற்றுவார்களா ? என்பதை இறைநம்பிக்கையாளர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

கஷ்டப்பட்டு ஈட்டியப் பொருளாதாரத்தை கடன் என்றப் பெயரில் ஒருவார் வாங்கிக் கொண்டு திரும்பத் தராவிட்டால் என்ன செய்வது ? அதற்காகவா இத்தனை கஷ்டப்பட்டு பொருளீட்டினோம் ? என்ற சிந்தகைனகள் எழுவது இயல்பு.

நிரந்தரமான மறுஉலக வாழ்க்கையை நம்பி அற்பமான இவ்வுலகில் வாழும் இறைநம்பிக்கையாளர்கள் தனக்கு கிடைத்ததையெல்லாம் தனக்குரியது என்று உரிமைக் கொண்டாட மாட்டார் அதிலிருந்து தேவையுடையோருக்கு கொடுத்து உதவ நினைப்பார் காரணம் கஷ்டப்பட்டுப் பொருளீட்டினாலும்,கஷ்டமில்லாமல் பொருளீட்டினாலும், குறைவாகப் பொருளீட்டினாலும்,நிறைவாகப் பொருளீட்டினாலும் அது அனைத்தும் இறைவனின் நாட்டப் பிரகாரமே மனிதர்களை வந்தடைகிறது என்று நினைத்து தங்களால் இயன்றவரை வாரி வழங்குவார்கள். 17: 30. தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும்,பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

பொருளாதாரமும் பெருகுகிறது நன்மையும் அதிகரிக்கிறது.

அடிப்படை வசதி இல்லாத ஏழைகளுக்கு அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் கடன் கொடுத்து உதவுகின்றவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து அவற்றிற்கான வெகுமதிகளேத் தனி.

  • கொடுத்தக் கடன் திரும்பக் கிடைத்து விடுகிறது.
  • பொருளாதாரம் பன்மடங்காகப் பெருகுகிறது.
  • நற்செயல் புரிந்ததற்கான நன்மை எழுதப்படுகிறது.

57:11. அல்லாஹ்வுக்கு யாரேனும் அழகிய கடன் வழங்கினால் அதை அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான். அவருக்கு மகத்தான கூலியும் உண்டு.

அல்லாஹ்வுக்காக கொடுத்தக் கடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட தவணையில் திரும்பப்பெற முடியவில்லை என்றால் இன்னும் அதன் தவணையை அல்லாஹ் அதிகப்படுத்தச் சொல்கின்றான். அல்லாஹ்வுக்காக பல தவனைகள் வழங்கியும் உண்மையிலேயே அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றால் அல்லாஹ்வுக்காக என்று கொடுத்தக் கடனை அவருக்கே தர்மமாக்கி விடும்படி கூறுகின்றான். 2:280. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.73

அல்லாஹ்வுக்காக கொடுத்தக் கடன் திரும்பப் பெறமுடியவில்ல என்றால் அதை தர்மமாக்கி விடும்படி அல்லாஹ் சொல்வதன் நோக்கமென்ன ?

அல்லாஹ்வின் வழியில் செய்யப்படுகின்ற நற்செயல்கள் அனைத்தும் பத்திலிருந்து பல மடங்காக அதனதன் செயலுக்கேற்ப நன்மைகள் பல்கிப் பெருகுகின்றன இதில் அல்லாஹ்வின் வழியில் செலவிடப்படுகின்றப் பொருளாதாரம் ( கடன், தர்மம், தஃவாப் பணிகள் ) மட்டும் உலகிலேயே ஒன்று நூறு மடங்காகப் பல்கிப்பெருகி விடும். 2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன்.ஏழைகளுக்குக் கொடுத்து திரும்பப்பெற முடியாத கடன் தொகையை தர்மத்தில் சேர்த்து விடும்படி அல்லாஹ் கூறுவதன் காரணம் அது அவருடைய பொருளாதாரத்தில் நூறு மடங்காகப் பெருக வேண்டும் என்பது தான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன்.

எந்த ஒரு அடியான் தனது பக்கம் முழுமையாகத் திரும்பி விடுகின்றானோ அவனை இறைவன் ஒருப் போதும் கை விடுவதில்லை என்பதற்கு அல்லாஹ்வை சாட்சியாக்கிக் ஏழைகளுக்கு கொடுத்த கடன் உதவியைக் கொண்டு அவருக்கு இவ்வுலகிலும், மறுஉலகிலும் வழங்கப்படும் வெகுமதிகள் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாலன் என்பதற்கு பெரிய எடுத்துக் காட்டாகும்.

அல்லாஹ்வை சாட்சியாக்கி கடன் பெற்றவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்.

அல்லாஹ்வை சாட்சியாக்கி கடன் பெற்ற அந்த இஸ்ரவேலர் தனது தேவை முடிந்ததும் குறித்த தவனையில் அதைத் திருப்பிக் கொடுத்து விடுவதற்காக வாகணங்களைத் தேடியும் அது கிடைக்காமல் மரத்தைக் குடைந்து அதற்குள் கடனாகப் பெற்ற தங்கக் காசுகளை வைத்து அதற்கு இறைவனை பொறுப்பு சாட்டி அனுப்பியதும் தங்கக்காசுகளை சுமந்து சென்ற அந்த மரம் போய்ச் சேரவேண்டியவருக்கு முறையாகப் போய்ச் சேர்ந்து விடுகிறது.

அல்லாஹ்வை சாட்சியாக்கி வாங்கிய கடனை வாகனங்கள் கிடைக்காத காரணத்தைக் கூறி தவனைகளை அதிகப்படுத்தி அவரை இழுத்தடிக்காமல்உடனடியாக சேரத்து விடுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி கடன் பெறுபவர்கள் அனைவருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும் அதற்காகவே அந்த சம்பவத்தை இறைவன் தனது தூதருக்கு சொல்லிக் காட்டினான்.

இன்று நாம் மரத்தைக் குடைந்து அதில் வைத்து அனுப்ப யாதொரும் அவசியமும் இல்லை கண் இமைக்கும் நேரத்தில் பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ளவர்களுடைய கைகளில் கிடைக்கும் அளவுக்கு கண்யூனிகேஷன் வளர்ச்சி அடைந்து விட்டது அதனால் சாக்குப் போக்குகள் கூறி கடன் கொடுத்தவரை இழுத்தடிக்காமல் செல்போனை ஃவிட்ச் ஆஃப் செய்து போடாமல், அல்லது அதைப்பார்த்துக் கொண்டே எடுக்காமல் விட்டு விடாமல் அல்லாஹ்வை சாட்சியாக்கி வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிக் கொடுத்து விடவேண்டும்.

இன்று கடன் கொடுப்பவர்கள் குறைந்துப் போனதற்கு கடன் வாங்கியவர்களின் நாணயமில்லாத்தனமும் ஒரு முக்கியக் காரணமாகும்.

  • எதையாவது சொல்லி கடனை வாங்கியப் பிறகு கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அல்லாஹ்வுக்காக தவனையை இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர் நம்மைத்தேடி வருவதற்கு முன் நாமே சென்றுக் கேட்பதில்லை,
  • கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டப்பிறகும் பொய்யான பலக் காரணங்கள் தினந்தோறும் சொல்வதற்கு பதிலாக அல்லாஹ்வுக்காக அதை விட்டுக் கொடுங்கள் என்றும் கேட்பதில்லை.
  • அதற்காக தினந்தோறும் ஒருப் பொய் சொல்லி சமாளிப்பது.

இதற்கெல்லாம் முக்கியக் காரணம் கொடுப்பவர் அல்லாஹ்வுக்கென்ற சிந்தனையில் கொடுப்பதில்லை, வாங்குபவர் அல்லாஹ்வை சாட்சியாக்கி வாங்குவதில்லை,

கடன் பெறுபவர் தன்னைப் போன்றே இன்னும் தேவையுடைய மக்கள் அதிகம் இருப்பதால் நாம் முறையாக நடந்து கொண்டால் இதைக் கொண்டு பிறரும் பயணடைவார்கள் என்றுக் கருதி அல்லாஹ்வை முன்னிருத்தி கடன் பெற வேண்டும், தவனை கடந்து விட்டால் தாமே சென்று தவனையை நீட்டிக்க வேண்டும், கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அல்லாஹ்விற்காக இதை விட்டுக் கொடுங்கள். அதை எனக்கு தர்மமாக்கி விடுங்கள் வேறு வழி எனக்கில்லை என்றுக் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் அழகிய கடன் திட்டம் புறக்கனிக்கப்படுவதால்.

  • அழகும் வனப்பும் இருந்தும் வசதி வாய்ப்பு இல்லாதக் காரணத்தால் வாழ்க்கையின் வசந்தத்தை நுகர முடியாமல் படி தாண்டிப் போன ஏழைக்குமருகள் எத்தனையோப் பேர் ?
  • அறிவும், சிந்தனைத் திறனும் அமையப்பெற்றும் கல்லூரி வாசலில் கால் வைக்க முடியாமல் கஞ்சா, அபின் வியாபாரியாக மாறிப் போன இளைஞர்கள் எத்தனையோப் பேர் ?
  • தொழில் துறையில் சிறு வயதிலிருந்தே பழுத்த அனுபவம் இருந்தும் ஒருக்கடை முதலாளி ஆக முடியாமல் கடைசி வரை கடைகளில் பொட்டலம் மடித்தவர்கள் எத்தனையோப் பேர் ?

மேற்காணும் இரு இஸ்ரவேலர்களுனுடைய நற்பன்புகளை உலகம் முடியும் காலம் வரை கடன் கொடுப்பவரும்,கடன் வாங்குபவரும் பின்பற்றியொழுகினால் உலகில் வறுமைத் தாண்டவமாடாது, வறுமையினால் உருவாகும் பிச்சை எடுத்தல், திருடுதல், படித்தாண்டுதல் போன்ற மனிதகுலத்திற்கு கேடுவிளைவிக்கும் வெறுக்கத்தக்க நிகழ்வுகள் அறவே நிகழாது.

வறுமையைத் துடைத்தெறிந்து குழப்பங்கள் முற்றிலும் நீங்குவதற்காக மனித குலத்திற்கு இறைவன் தொகுத்து வழங்கிய ''அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுத்தல் திட்டம் ‘’ இறைநம்பிக்கையாளர்களால் அவசியம் நிறைவேற்றியாக வேண்டும்

கடன் அதிகரித்திடாதிருக்க அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஓதிய துஆ.

''இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்வார்கள்.

'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?'என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது

'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள், ஆதாரம் புகாரி 2832

மேற்காணும் துஆவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையின் அத்தஹயாத் இருப்பில் ஓதிவந்தார்கள், நாமும் அவ்வாறே ஓதவேண்டும்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

ஞாயிறு, 21 ஜூன், 2009

என்னடா டிக்ஸா



என்னடா டிக்ஸா.. இப்படி ஆயி போச்சடா நம்ம ப்ளாக். ஒரு பயலும் பதிவும் போட மாடேங்கிராங்கே, பின்னூட்டமும் போட மாடேங்கிராங்கே.போட்டதையும் டெலீட் பண்ணி போடுராங்கே. பேசாம ப்ளாக் ய வித்துடலாமோ! ஆனா ஒன்னு தெனமும் இந்த பயலுக ஓபன் பண்ணி பாக்கிராங்கய. அதுக்கு ஆதாரம் தான் மேல உள்ள போட்டோ.

செவ்வாய், 9 ஜூன், 2009

டாப் டென் கழக பொன் வார்த்தைகள்

10- லவடைக்காபால்.

நாமளும் மதராஸ்க்கு போக மாட்டோமான்னு ஏங்கிட்டு இருந்த காலம் இது. கழகம் அப்போ ஆரம்பிக்கவே இல்ல. அப்போ பாரு முட்டு வர ஒரு சட்டையும் , கொஞ்சம் போல ஒரு பேண்டும் போட்டுட்டு ஒருத்தன் மதராஸ் போயிடு வந்து எறங்குனான் , அவன் தான் நம்ம சட்னி அன்வர். வந்தவன் மெட்ராஸ் பாசையிலே பெரிய பெரிய வார்த்தையா சொன்னான். ஓத்தா, ஒம்மாள, லவடைக்காபால், அதுல்ல லவடைக்கபால் ரெம்ப ஹிட் ஆயிடிச்சி.

9-கல்லி உல்லி

துபாய் ல இருந்து வந்த சாகுல் அண்ணன் சொன்னது இது. அவர் ஒழுங்கா கல்லி வல்லின்னு தான் சொன்னாரு, அப்போ நமக்கு என்ன தெரியும் அத பத்தி. சொல்லுறது ஒன்னும் புரியாம நாமளும் அத தப்பா கல்லி உல்லின்னு சொல்லி அவரையும் கிண்டல் அடிச்சிட்டு நாமளும் சொல்லிட்டு நடந்தோம். இதுவும் கழகம் தொடங்கும் முன்பு உள்ள சம்பவம்.

8-லோடு ஆவு மக்கா லோடு ஆவு

இத யோசிக்கும் போதே மணியோட காம வெறி தான் ஞாபகம் வருது. மக்களுக்கு நீச்சல் சொல்லி கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு காம கழியாட்டம் நடத்தியும், காம வெறில பட்ட பகல்ல எல்லா பய்யமாருக்கு முன்னாடி வச்சி பைசல் எ கதம்பயில போட்டு கதற கதற கற்பழிச்சும், வெறி அடங்காம ராத்திரி இன்டர்நெட் செண்டர்ல போய் பிட் படம் பாக்க போன காலம் அது. எப்போவுமே என்ன தான் கூட்டிட்டு போவான், நான் இல்லைனா தஸ்லீம் எ கூட்டிட்டு போவான். நாங்க நல்ல மெயில் செக் பண்ணுவோம். மேட்டர் லோடு ஆகுது ன்னு சொல்லுவோம், அதுக்கு அவன் சொன்னதுதான் "என்ன மக்கா! லோடு ஆவு லோடு ஆவு ன்னு சொல்லுதே ஒன்னும் ஆவ மாட்டேங்குதே"

7-அடிச்சி சற்கு..கு..லேட் ஆய்டிலா

இத சொன்னா சில கழக மக்களுக்கு புரியாது. செஞ்சி காட்டினாதான் தான் புரியும். சம்பவம் நடந்தது ஒரு ராத்திரி, நம்ம ஊர்ல உள்ள ஒரு பெரிய மனுஷன் எல்லாருகிட்டயும் அன்னைக்கு காலைல கலெக்டர் ஆபீஸ் முன்னாடி போராட்டம் நடத்தி போலீஸ் கிட்ட அடி வாங்கிட்டு வந்த கதைய ரீயாக்சனோட சொல்லி கொண்டு இருக்கும் போது இந்த பொன் வார்த்தைய வெளியிட்டார். உடுவோமா கழகம் ? கொண்டு வந்துடோம்ல அவரையும் அவர் ரீயாக்சனையும். நார் நார இழுத்து தோப்புலையும், ரோட்லையும் போட்டோம்.

6-சூப்புலே சூப்பு

இந்த வார்த்தைய எல்லாரும் சூப்பி சூப்பி நாரடிச்சி அத மறந்தாலும், கழகத்தின் ஒரு உறுப்பினர் இன்று வரை அதை மறக்காமல் சூப்பி கொண்டு இருக்கிறார் என்றால் அந்த பெருமை அபுல்லையே சாரும். அந்த அளவுக்கு இந்த வார்த்தை ஹிட். ஒரு குடிகாரன் சொன்ன பொன் வாக்கியம் இது. அவன் சொன்ன ஸ்டைல் தனி தான், நடு ரோட்ல எல்லாருக்கும் முன்னாடி வேட்டிய தூக்கிட்டு "சூப்பிலே..... சூப்பு " ன்னு சொல்லும் போது நம்ம கண்ணு கரிஞ்சி போச்சி.

5-டைமண்ட்

அவனுக்கு வேணும் இது, அவ்வளவு பணத்தையும் எங்க தெரியுமா கொண்டு போட்டாரு.... டைமண்ட் ல கொண்டு போட்டாரு. ரெண்டு விரலையும் மடகிட்டு சொன்னாரு பாரு, அப்பவே கண்ண கட்டிடிச்சி. அப்போ தான் நெனச்சேன் , இவ்வளவு நாள் இருந்தும் நமக்கு தெரியலியே! ஒரு பெண் உறுப்புக்கு இப்படி ஒரு பெயர் இருக்கான்னு புரிஞ்சிக்கிட்டேன். இந்த மாட்டேற கழகத்தில ஒப்படைக்க , அப்புறம் டெய்லி டைமண்ட் தான், மேட்டர் கதை பேச ரெம்ப வசதியா போச்சி கழகத்துக்கு

4-ஏ .... ஐய்யா

இதுவும் ஒரு பெண் உறுப்பு தாங்க, பாருங்க! எப்படி எல்லாம் பெயர் வைக்கிறாங்கன்னு. இந்த பெயர் வச்சது நம்ம தலை , சம்பவம் நடந்தது துபாய் ல ஒரு ராத்திரி படம் பார்த்து கொண்டு இருக்கும் போது. படத்துலே ஒரு நிர்வாண காட்சிங்க , கேமரா மேன் ரெம்ப பொறுமையா காமேராவே கொண்டு போகும் போது , நம்ம தலை ...ஐயோ ஐயோ எப்படி சொல்ல இத . வேணாங்க போதும் இதோட , எப்படியோ தலை சார்பா ஒரு பெயர் கிடச்சி..

Reaz

http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/tsmileys/m.gif Be Open Minded Be open Eyes http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/tsmileys/m.gif

இது என்னென்னு தெரியுமா, இதுதாங்க தலையோடு லேடஸ்ட் மெயில் சிக்நேச்சர். யூனுசுக்கு ஒரு மெயில் அனுப்புனான் அதுல இருந்து சுட்டது.இந்த மேட்டரக்கு எவ்வளவு பொருத்தம்னு பாருங்க.

3-குதிர குண்ணைக்கு மேல..

கழகம் பள்ளிக்கு போகுதுன்னா ஒரு மேட்டேரோட தான் திரும்பி வரும், அசர் தொழுது முடிச்சிட்டு கழுவல் புக்கை வச்சிட்டு நின்ன கொஞ்ச நேரத்தில புல் ஆயிடும். அப்படி இருந்திச்சி நம்ம ஊர். அதுலே ரெம்ப நாள் ஓடுன படம் தான் "குதிர குண்ணைக்கு மேல". இதுல ஹீரோ நம்ம அசரத்து, வில்லன் தான் குதிர குண்ண ஆசாமி. சம்பத்துக்கு பிறகு அவர அப்படிதான் கூப்பிடுவோம். அவர் சொன்னது " நாம எல்லாம் செருப்ப கீழ போட்டிருகோம், இவரு மட்டும் குதிர குண்ணைக்கு மேல போட்டிருக்காரு" இத கேட்ட எங்களுக்கு குபீர் என்ற ஒரு சிரிப்பு, போதுண்டா மாப்ளே இன்னும் ஒரு வாரத்திக்கு ன்னு சொல்லி கழக சபையில போட்டு கழுவு கழுவுன்னு கழுவுனோம். இன்று வர கழகம் வாயில இருந்து வர ஒரு வார்த்த ன்னு சொன்னா அதுலே இதுவும் ஒன்னு.

2-மாறி மாறி கொட்டைய சூப்புங்கலே

இங்க தான் நீங்க புரியனும், "சூப்புலே சூப்பு" சொன்னது ஒரு பைத்திய காரன், எதோ குடி போதையில சொல்லிட்டான் , இத சொன்னது , நாம எல்லாம் கணினிய பாக்கதுக்கு முன்னாடியே மேல் பாக்கட்டுலே floppy யும், கீழ் பாகட்டுலே CD யும் வச்சிட்டு நடந்த ஒரு ஆர்வமுள்ள சுமாஞ்சி.இந்த வார்த்தைக்கு founder ன்னு கூட சொல்லலாம். எல்லாரும் நைட் பேசிட்டு தான் இருப்போம், அவனும் இருப்பான், திடீர்னு " மாறி மாறி கொட்டிய சூப்பிட்டு படுங்கலேன்னு சொல்லிட்டு அவன் போய்டுவான்". மொதல்லே நாங்களும் அவனுக்கு பைத்தியம் புடிசிட்டோன்னு நெனச்சோம்.டாக்டர்ட எல்லாம் கூட்டிட்டு போனோம். அப்புறம் தான் தெரிஞ்சிச்சி அந்த வார்த்தையில இவ்வளவு மேட்டர் இருக்கன்னு. அப்புறம் அவன பாத்து எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சோம். இது பொன் எழுத்துக்களால் சூப்ப பட வேண்டிய வார்த்தையில ஒண்ணு

1-நிக்க முடியாந்துங்கேன் என்ன போட்டு பேசிட்டு கிடக்க

இது ஒரு பெரிய வரலாருங்க.நம்ம பைசல் அத ஒரு பதிவா போடுவான். நான் கொஞ்சம் சொல்லி முடிக்கிறேன். சம்பவம் நடந்தது களக்காடு டூர் ல வச்சி. அங்க ஒரு டீ கட காரன்கிட்ட நம்ம கிருஷ்ணன் கோவில் சரீப் கேட்டான் " மலைக்கு மேல போகலாமா "? அதற்கு அவர் "நல்ல குளிர் தம்பி நிக்க முடியாதுன்னு" அமைதியா சொன்னார். நம்மாளு மேலும் மேலும் அவர நச்சரிக்க , அவர் கடுப்பாகி " நிக்க முடியாதுங்கேன்" அப்படின்னு சொன்னார். நம்ம பயலுங்க அதுல கய்யி காலெல்லாம் சேர்த்து " நிக்க முடியாதுங்கேன் , என்ன போட்டு பேசிட்டு கெடக்க" ன்னு ஆகிட்டானுங்க. அப்புறம் என்னா கொஞ்ச நாளைக்கு தாங்க முடியாது, எதுக்கு எடுத்தாலும் இது தான் " செய்ய முடியாந்துகேன்" “போக முடியாந்துங்கேன் என்ன போட்டு பேசிட்டு கெடக்க " எப்பப்ப ஒரு மறக்க முடியாத வார்த்தைய போச்சு இது.

அம்புடுதாங்க , ரெம்ப யோசிச்சி போட்ட மேட்டர் இது . மொக்கை குத்தினாலும் சரி, காமெடி குத்தினாலும் சரி , உங்க பின்னோட்டத போடுங்க. பைசலோட ஹெல்ப் இல்லாம எழுதுனது இது , அதுனால வரலாறு மறந்திருக்கலாம் அல்லது பிழை இருக்கலாம். அத உங்க பின்னூட்டதில போடுங்க, அடுத்த மாசம் புது போஸ்ட் போட்டு அப்டேட் பண்ணிடலாம்

ஞாயிறு, 7 ஜூன், 2009

about HAMAS


Refer the link : http://marudhang.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D



ஹமாஸுக்குப் பேசத் தெரியாது!

ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றால் இஸ்ரேல்? ஹமாஸ் செய்வது அநியாயம் என்றால் இஸ்ரேல் செய்வது? ஆயிரம் சொன்னாலும் துப்பாக்கி தூக்கிய இயக்கம்தானே என்று கடுகடுத்துக்கொண்டிருந்தவர்கள்கூட ஹமாஸை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இஸ்ரேல் நடத்திய தொடர் குண்டு வீச்சுகள், ஹமாஸை ஒரு ஹீரோவாக உருமாற்றி இருக்கிறது. தீவிரவாத இயக்கம் என்னும் பெயர் மெல்ல மெல்ல அழிந்து, ஒரு பேராளி குழுவாக, அரசியல் நிறுவனமாக ஹமாஸ் எழுச்சி பெற்றிருக்கிறது. இது நல்லதா தீயதா என்பதை ஆராய்வதைக்காட்டிலும் இஸ்ரேலின் அராஜகத்தால் ஏற்பட்ட இந்த தவிர்க்கமுடியாத விளைவை ஏற்றுக்கொள்வது முக்கியமானது.

பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ், போதுமான அளவுக்குச் செயல்படாமல் இருப்பதும் இந்தப் புதிய மாற்றத்துக்குக் காரணம். இருபத்து இரண்டு தினங்கள், நிறுத்தாமல் காஸாவைத் தாக்கி சீரழித்திருக்கிறது இஸ்ரேல் படை. சிறு குழந்தைகளின் சடலங்கள் புதைக்குழிகளுக்கு கீழே இருந்து கண்டெடுக்கப்படுகின்றன. சரியான இழப்பு எண்ணிக்கை தெரியப்போவதே இல்லை. இன்றைய தினம் வரை, போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. சிறு சத்தம் கேட்டாலும் பெரியவர்களும் குழந்தைகளும் ஓடிச்சென்று பதுங்குக்குழிக்குள் மறைந்துகொள்கிறார்கள் . போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுவிட்டாலும், பீதியும் ரணமும் வலியும் ஆறவில்லை.

ஏன் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை? உதடுகள் துடிக்க கேள்வி எழுப்புகிறார்கள் பாலஸ்தீன மக்கள். குளித்து நாள்கள் பல ஆகிவிட்டன. குடிக்கவே போதுமான நீர் இல்லை. காலி கோகோ கோலா பாட்டில்களை ஒரு கூடையில் நிரப்பிக்கொண்டு சிறுவர்கள் பல மைல் தொலைவு நடந்துசெல்கிறார்கள். அரசாங்கமும் எங்களைப் போலவே இடிந்து உட்கார்ந்திருப்பது வேதனையளிக்கிறது. இஸ்ரேலைத் திருப்பித் தாக்கவும் இல்லை. எங்களை மீட்டெடுக்கவும் இல்லை.

இஸ்ரேல் போன்ற வலிமையான ஒரு தேசத்தை திருப்பித் தாக்கும் திராணி உண்டா என்றெல்லாம் யோசிக்கவில்லை ஹமாஸ். தோதான சமயங்களில், இஸ்ரேலுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் அரசாங்கமா, ஃப்பூ என்ற ஊதித்தள்ளும் இஸ்ரேல்கூட, ஹமாஸ் என்றால் சற்றே பின்வாங்குகிறது. இஸ்ரேலின் ஆயுத பலத்தையும் ஆள்பலத்தையும் ஹமாஸோடு எந்த வகையிலும் ஒப்பிடமுடியாது என்றாலும், ஹமாஸின் கெரில்லாத் தாக்குதல் போர்முறைகள் மீது இஸ்ரேலுக்கு அச்சமுண்டு. வான் படைத் தாக்குதலை முன்பே ஆரம்பித்துவிட்ட இஸ்ரேல், தரைப்படைத் தாக்குதலை இறுதிகட்டத்தில்தான் நிகழ்த்தியது. அதுவும் தயக்கத்துடன்தான். காரணம், ஹமாஸ்.

ஹமாஸ் ஒரு ஹீரோவாக உதயமாவது இந்த இடத்தில்தான். இஸ்ரேல் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று சர்வதேச அளவில் ஹமாஸ் ஒரு சவாலாக மாறியுள்ளது. பாலஸ்தீன மக்களின் நிஜமான பிரதிநிதி முகமது அப்பாஸின் அரசாங்கம் அல்ல, ஹமாஸ்தான் என்று பலரும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். முகமது அப்பாஸ் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் காஸா பகுதி மக்கள் ஹமாஸை திடமாக நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸால் வெற்றிபெற முடியவில்லை என்பது உண்மை. ஆனால், முன்பை காட்டிலும் கூடுதலான மக்கள் ஆதரவை ஹமாஸ் திரட்டியிருக்கிறது. இந்த அரசியல் வெற்றியை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டது ஹமாஸ். காஸா மக்களே, எமக்குப் பின்னால் அணிதிரளுங்கள். எத்தனை சங்கடங்கள் வந்தாலும் கலங்காதீர்கள். நாங்கள் உடனிருக்கிறோம். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை நிச்சயம் முன்னெடுத்துச் செல்வோம். உங்கள் ஆதரவுடன்.

ஹமாஸ் தொடங்கப்பட்டது 1987ம் ஆண்டில். ஹமாஸ் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது இன்னொரு அமைப்பு. ஜமாத் அல் இக்வான் அல்முஸ்லிமின் என்பது அதன் பெயர். இஸ்லாமிய சகோதரத்துவம் என்று அர்த்தம். சமூகப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். வீதிகள் அமைத்திருக்கிறார்கள். மசூதிகள் கட்டியிருக்கிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரமாகப் பரப்பியிருக்கிறார்கள். ஓர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைக்கூட உருவாக்கியிருக்கிறார்கள். முக்கிய நம்பிக்கைகள் இவை. அல்லாஹ்வையும் இறை நம்பிக்கையையும் போற்றுவோம். இஸ்லாமிய நெறியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறைவனுக்காக உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருப்போம்.

தொடங்கப்பட்டது எகிப்தில் என்றாலும் மெல்ல மெல்ல சிரியா, ஜோர்டன் என்று ஆரம்பித்து மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் இவர்கள் பரவ ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனக் கிளை 1946ல் ஜெருசலேத்தில் உருவானது. எழுபதுகளில், ஷேக் முகமது யாசின் என்பவர் தலைமையில் இந்த இயக்கம் காஸாவில் செயல்பட்டு வந்தது. இதுவே பின்னர் ஹமாஸாக உருமாறியது.

இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைனை முதன் முறையாக இஸ்லாமிய நோக்கத்தில் அணுகியது ஹமாஸ். பாலஸ்தீனத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை, இஸ்ரேலில் இருக்கும் யூதர்கள் ஆக்கிரமிக்க துடிக்கிறார்கள். அதை இறைவனின் பெயரால் தடுத்து நிறுத்தவேண்டும். இஸ்லாம் தழைக்கவேண்டுமானால், இஸ்லாமியர்கள் உயிர்த்திருக்கவேண்டுமானால், இஸ்ரேல் மீது புனிதப் போர் தொடுக்கவேண்டும். இஸ்ரேலை எதிரி தேசமாகக் கருதவேண்டும். யூதர்களை, எதிரிகளாக.

ஒரு பக்கம், சமூக சேவைகள். இன்னொரு பக்கம் மதச் சேவைகள். மற்றொரு பக்கம், இஸ்ரேலை எதிர்ப்பதற்கான தயாரிப்புகள். மூன்றையும் சமஅளவில் முன்னெடுத்துச்சென்றது ஹமாஸ். எதிலும் குறை வைக்கக்கூடாது என்பதில் ஹமாஸ் தெளிவாக இருந்தது. தனிமனித ஒழுக்கம் முக்கியம். இஸ்லாமிய வாழ்க்கை நெறி முக்கியம். சாலைகள், பள்ளிக்கூடங்கள் முக்கியம். எதிரிகளை அழிப்பதும் முக்கியம்.

பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த யாசிர் அராஃபத்தின் பி.எல்.ஓ. (பாலஸ்தீன விடுதலை இயக்கம்) ஹமாஸிடம் இருந்து இரு முக்கிய விஷயங்களில் வேறுபடுகிறது. பி.எல்.ஓ. இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதில்லை. தேவைப்பட்டால் இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஹமாஸுக்கு பேசப் பிடிக்காது. எதிரிகளுடன் என்ன பேசுவது? பேசி தீர்க்கக்கூடிய பிரச்னையா இது? எதிரிகளை ஒழிப்போம். புனித இஸ்லாமிய பாலஸ்தீனை உருவாக்குவோம்.


தொடக்கக் காலத்தில், யூதர்கள் மீது நேரடியாகவே தாக்குதல்கள் தொடுத்திருக்கிறது ஹமாஸ். அரசாங்கம் இழைக்கும் குற்றங்களுக்கு பொது மக்களைத் தண்டிக்கலாமா என்று கேட்கப்பட்டபோது ஹமாஸ் சீறிப் பாய்ந்தது. இவர்கள் ஏன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்? ஓர் அரசாங்கம் தவறு செய்யும்போது தட்டிக்கேட்கவேண்டாமா? எதிர்த்து போராட வேண்டாமா? தவிரவும், பொதுமக்கள் ராணுவத்தினர் என்று தனித்தனி பிரிவுகள் இல்லை அங்கே. சுழற்சி முறையில் சிவிலியன்கள் ராணுவத்தில் பணிபுரிந்தாகவேண்டும். ஆகவே, யூதர்கள் அனைவரும் நமக்கு எதிரிகளே.

இஸ்ரேலின் நிரந்தர தலைவலியாக ஹமாஸ் மாறிப்போனது. 2000ம் ஆண்டு முதல் 2003 வரை ஹமாஸ் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களைக் கண்டு அலறியது இஸ்ரேல். ஹமாஸை அழிக்க என்னென்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்து பார்த்தது இஸ்ரேல். அமெரிக்காவின் உதவியுடன். அழிவதற்கு மாறாக கூடுதல் வளர்ச்சி பெற்றது ஹமாஸ். அட பரவாயில்லையே நமக்காக போராடுவதற்கு ஓர் இயக்கமாக இருக்கிறதே என்று மக்களும் ஹமாஸின் பின்னால் அணிதிரள ஆரம்பித்தார்கள்.

ஹமாஸ் தன் போராட்ட வழிமுறைகளை மாற்றிக்கொண்டது. தேவைப்படும்போது மட்டுமே ஆயுதம். பிற சமயங்களில், அரசியல் பணிகள். ஆளுங்கட்சியின் (பி.எல்.ஓ.வின் ஃபதா கட்சி) ஊழல்களை அம்பலப்படுத்தி பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானது ஹமாஸ். ஜனவரி 2006ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹமாஸ் அபரிமிதமான வெற்றியை அள்ளிக்கொண்டபோது, உலகம்தான் வாய்பிளந்து நின்றதே தவிர பாலஸ்தீனர்கள் வியக்கவில்லை. சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொறுப்பேற்ற ஹமாஸ் தலைவர்கள் ஜூன் 2007ல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். மக்களே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட பிறகு எங்களை யாராலும் அகற்ற முடியாது என்று திமிறி எழுந்த ஹமாஸ் வலுக்கட்டாயமாக காஸாவைக் கைப்பற்றிக்கொண்டது.

கிழக்குக் கரை முகமது அப்பாஸின் (ஃபதா கட்சி) கட்டுப்பாட்டில் இருக்கிறது. காஸா ஹமாஸின் கட்டுப்பாட்டில். இரு வேறு அரசாங்கங்கள் அங்கே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டும் எதிரெதிரானவை. ஒன்று மற்றொன்றை ஏற்றுக்கொள்வதில்லை. தேவைக்கேற்ப தன் போர்முறைகளையும் கருவிகளையும் மாற்றிக்கொள்ளத் தெரிந்ததால் ஃபதாவைவிட ஹமாஸுக்கு அதிக ஆதரவும் வரவேற்பும் கிடைத்துவருகிறது.

தற்போது ஹமாஸ் தீவிரமாகப் பயன்படுத்தி வரும் ஆயுதம், அரசியல் பிரசாரம். சர்வதேச கவனத்தை காஸாவை நோக்கி திருப்பியாகவேண்டும். பாலஸ்தீன் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டவேண்டும். இஸ்ரேலின் மேலாதிக்கத்தை முறியடிக்கவேண்டும். பாலஸ்தீனர்களுக்கு சுதந்தர தேசத்தைப் பெற்றுத்தரவேண்டும். அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது ஹமாஸ்


(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)

Refer the link : http://marudhang.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

Posted by மருதன் at 2:47 AM 3 comments
Labels: ,
Saturday, November 29, 2008




மீடியாவை நம்பலாமா?

நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதததுபோல் அமைதியாக இருந்துவிட்டது. வேறு எந்த மீடியாவிலும் செய்தி வரவில்லை. கார்டியன் ஒரு துணுக்குச் செய்தியை மாத்திரம் வெளியிட்டது. அதுவும்கூட முழுமையான ஒரு பதிவு அல்ல.

பிப்ரவரி 28, 2008 அன்று தொடங்கியிருக்கிறார்கள். காஸா முனைக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு அது. ஒட்டினாற்போல் ஒரு திறந்தவெளி மைதானம். குழந்தைகள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதிகம் சத்தம் எழுப்பாதபடி அவர்கள் தலைக்கு மேலே படர்ந்த அந்த விமானம் சட்டென்று குண்டுகளை வீசிவிட்டு கடந்து சென்றுவிட்டது. நான்கு சிறுவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர். மேலும் மூன்று பேர் ரத்தம் சொட்டச்சொட்ட அலறிக்கொண்டு ஓடிபோயிருக்கிறார்கள். இறந்து போனவர்களில் எட்டு வயது குழந்தையும் அடக்கம்.

தாக்கியிருப்பது இஸ்ரேல் ராணுவம். விளையாடிக்கொண்டிருப்பவர்கள் சிறுவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகே குண்டுகள் வீசப்பட்டிருக்கவேண்டும். காரணம், அந்தப் போர் விமானங்கள் தலைக்கு மேலே மிக அருகில் பறந்து சென்றிருக்கின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் காலம் காலமாக யுத்தம் தொடர்ந்துகொண்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால், சமீப காலமாக மீடியாவில் செய்திகள் அதிகம் வராததால், பாலஸ்தீனம் அமைதியாகத்தான் இருக்கிறது போலும் என்று உலகம் நினைத்துக்கொண்டிருந்தது.

பாலஸ்தீனத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த வெள்ளை அறிக்கை இந்த அனுமானத்தைச் சிதறடித்திருக்கிறது. ஜூன் 2007 தொடங்கி ஜூன் 2008 வரை கிட்டத்தட்ட 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில், கவனிக்கப்படவேண்டிய விஷயம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள். விளையாடிக்கொண்டிருந்தவர்கள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள். கடைத்தெருவில் ஓடிக்கொண்டிருந்தவர்கள். தெரு முனையில் கூடி கதை பேசிக்கொண்டிருந்தவர்கள்.

எனில், இஸ்ரேல் அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? குழந்கைளைத் தேர்ந்தெடுத்துக் கொல்லும் ராணுவ ஆபரேஷன் மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்? இத்தனைக் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும்போது, செய்தித்தாள்களும் இணையத்தளங்களும் டிவி சானல்களும் என்ன செய்துகொண்டிருந்தன?

அல் ஜசீராவைப் பற்றி இங்கே அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். மத்தியக் கிழக்குச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடும் நிறுவனம் இது. பாலஸ்தீன குழந்தைகள் தாக்குதல் குறித்து விரிவாக அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பியது.சில வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்தில் இணைத்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளும். ஒரு குழந்தை திக்கித்திணறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது. என் பெயர் இன்னது. நான் இங்கே குடியிருக்கிறேன். என் கண் முன்பே என் அப்பாவை அவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.

இஸ்லாமியர்களின் குரல், அல் ஜசீரா. ஆனால், பிபிசி போல் உலகெங்கும் பிரபலமான அமைப்பு அல்ல இது. அல் ஜசீராவின் இணையத்தளத்தை தினந்தோறும் கவனித்து வருபவர்களுக்கு மாத்திரமே அது தரும் செய்திகள் சென்றடையும். பாலஸ்தீன் குறித்து அல் ஜசீரா அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வந்தபோதும் பரவலான உலகக் கவனத்தை அவை ஈர்க்கவில்லை.

மீடியா லென்ஸ் என்னும் நிறுவனம் இதற்கு விடை கண்டுபிடிக்கப் புறப்பட்டது. மீடியா என்று வந்துவிட்டால் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் வெளியிடுவதுதானே தர்மம்? எந்தச் செய்தியை வெளியிடவேண்டும் எந்த செய்தியை வெளியிடக்கூடாது என்று யார் முடிவு செய்கிறார்கள்? ஏன்?

கார்டியனில் பாலஸ்தீன் குறித்து எழுதிய கட்டுரையாளருக்குச் செய்தி ஒன்றை அனுப்பியது மீடியா லென்ஸ். ஐயா, உங்கள் கட்டுரையை வாசித்தோம். பலரும் வெளியிடாத அந்தச் செய்தியை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால், இத்தனைக்கும் காரணமான இஸ்ரேல் ராணுவத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லையே. ஏன்? குழந்தைகள் இறந்துபோனார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி, யாரால் என்பதையும் எழுதியிருக்கவேண்டாமா? கட்டுரையாசிரியரிடம் இருந்து பதிலில்லை.

அடுத்து, பிபிசியைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அன்புள்ள ஜெரிமி போவன், பிபிசியின் மத்திய கிழக்கு எடிட்டர் நீங்கள்தானே? சமீபத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் வெள்ளை அறிக்கையை வாசித்தீர்களா? எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? நீங்கள் ஏன் இந்த அறிக்கையைப் பற்றி ஒரு வரி கூட விவாதிக்கவில்லை? சமீப காலங்களாக, பாலஸ்தீனில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை கிட்டத்தட்ட தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருவதற்கு என்ன காரணம்? தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இணையத்தளத்திலும் ஒரு செய்தியையும் நீங்கள் வெளியிடவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா? உங்களை விட எத்தனையோ மடங்கு சிறிய நிறுவனம் அல் ஜசீரா. அவர்களுக்கு இருப்பும் பொறுப்புணர்வில் ஒரு சிறிய அளவாவது உங்களுக்கு இருக்கவேண்டாமா? பதிலில்லை. வெள்ளை அறிக்கையை வாசித்து அதிர்ந்து போன பலரும் பிசியைத் தனித்தனியாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். செய்திகளை எந்த அடிப்படையில் பிபிசி தேர்ந்தெடுக்கிறது? எந்த அடிப்படையில் ஒளிபரப்புகிறது? தவறு செய்தது இஸ்ரேல் என்பதால் கண்டும்காணாமலும் இருந்துவிட்டீர்களா? அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இல்லை. அமெரிக்கா இல்லாமல் பிரிட்டன் இல்லை. எனவேதான் அடங்கிபோய்விட்டீர்களா?

எந்தவொரு விளக்கத்தையும் பிபிசி அளிக்காததால், க்ளாஸ்கோ மீடியா க்ரூப் என்னும் நிறுவனம் பிரிட்டனில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. மத்திய கிழக்கு பற்றி வெளிவரும் செய்திகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இஸ்ரேல், பாலஸ்தீன் இரு தரப்புச் செய்திகளும் உங்களை வந்தடைகின்றதா? 2000 பேரிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் பற்றி எங்களால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இஸ்ரேல் பற்றிய ஒரே சார்பான செய்திகள்தான் கிடைக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீனர்கள் என்பதால் அவர்களை நிறைய ஃபோகஸ் செய்யவேண்டும். 95 சதவீதத்தினரின் வருத்தம் இது.

எனில், மக்கள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டும் எதைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதை மீடியா உலகம்தான் முடிவு செய்கிறது. மீடியா என்றால் பிபிசி போன்ற பெரும் நிறுவனங்கள். அவர்கள் எதை அளிக்கிறார்களோ அதை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்தில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பலமான ஓர் இனத்தால் மட்டுமே இன்னொரு இனத்தை ஒடுக்கிவைக்கமுடியும். பாலஸ்தீனை இஸ்ரேல் ஒடுக்குவது போல. இஸ்ரேலுக்கு ராணுவ பலம் மாத்திரமல்ல உலகளவில் செல்வாக்கும் இருப்பதால்தான் மீடியாவை அவர்களால் தேவைக்கேற்ப உபயோகித்துக்கொள்ள முயல்கிறது.

பாதிக்கப்படுபவர்களின் செய்திகளை வெளியிட்டுவருவதால் அல் ஜசீரா இதுவரை சந்தித்துள்ள பிரச்னைகள் ஏராளம். அவர்கள் அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தொலைபேசி மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அனைத்தையும் கடந்துதான் இயங்கிக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம். நாங்கள் தருவதுதான் செய்தி. நாங்கள் அளிக்கத் தவறும் செய்திகளை வேறு யார் அளித்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் மீடியா உலகம் வழங்கும் நீதி. பிபிசி போன்ற பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு இருக்கிறது. மக்களிடையே நல்ல பெயரும் செல்வாக்கும்கூட இருக்கிறது. மாறுபட்டு சிந்திக்கும் இணையத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வலைப்பதிவாளர்களின் தளங்கள் கடத்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. செல்வாக்கில்லாத சிறு பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவான உண்மை இது.

பிபிசி, சிஎன்என், டைம், கார்டியன் போன்ற நிறுவனங்களிடம் இருந்துதான் பாலஸ்தீன் பற்றியும் இராக் பற்றியும் ஆப்கனிஸ்தான் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகம் தினம் தினம் தெரிந்துகொள்ளமுயல்கிறது.